மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கவும், தகுதிகளை பூர்த்தி செய்யும் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கவும் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, வேடசந்தூர் தொகுதி திமுக உறுப்பினர் எஸ்.காந்திராஜன், தனது தொகுதி மற்றும் தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் எத்தனை பேர் பயன்பெறுகின்றனர், பல்வேறு இடங்களில் ஏழை மக்கள் மனு அளித்தும் அனுமதியளிக்கப்படவில்லை என்ற விவரங்களை தெரிவித்தனர். மனு அளித்து தகுதியானவர்கள் அனைவருக்கும் வழங்கப்படுமா? என வினவினார்.

ஈராக்கை புறக்கணித்த அரசாங்கம்?
Video Thumbnail
Popular This Week
|