Clean Sri Lanka வேலைத்திட்டத்தினால் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தனியார் பஸ் சங்கங்களுக்கும் பதில் பொலிஸ்மா அதிபருக்கும் இடையில் இன்று (08) இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து,நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கவிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்வதில்லை என பஸ் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
