இஸ்ரேலின் தேசிய மத நிலையங்களையோ அல்லது அதுபோன்ற இடங்களையோ நிர்மாணிப்பதற்கு எந்தவொரு அரசாங்க நிறுவனமும் அனுமதி வழங்கவில்லை என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று (08) பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதுவரை புத்தசாசன அமைச்சோ மத கலாசார அலுவல்கள் அமைச்சோ அல்லது அதன் கீழ் உள்ள திணைக்களங்களோ சமய நிலையங்களையோ அல்லது அதுபோன்ற இடங்களையோ இஸ்ரேலியர்கள் நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்கவில்லை என்றார்.
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் தற்போது பாதுகாப்பு அமைச்சினால் இஸ்ரேலிய மத நிலையங்கள் அல்லது கலாசார நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அங்கு சுட்டிக்காட்டினார்.
அவ்வாறான இடங்களில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.
