அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கான பூர்வாங்க ஆய்வுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு அரசாங்கங்கள் எடுக்கும் பல்வேறு தீர்மானங்களினால், தொழிற்சங்க கோரிக்கைகள் ஒவ்வொரு தர அரசாங்க ஊழியர்களுக்கும் இடையில் கடுமையான சம்பள முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1992ஆம் ஆண்டிலிருந்து சில அரச ஊழியர்களின் சம்பளத்தில முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் அரச ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சம்பள முரண்பாடுகளை நீக்குவது மிகவும் சிக்கலான நிலை எனவும் பேராசிரியர் சந்தன அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண நிதியமைச்சகத்துடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது என்றார்.
