பஸ்கள் செல்லுமபோது நடத்துனர்கள் மிதிபலகையில் நிற்க முடியாது என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட தெரிவித்துள்ளார்.
தற்போது பஸ்களை இயக்குவதில் ஏற்பட்டுள்ள போட்டி காரணமாக நடத்துனர்கள் ஆபத்தை பொருட்படுத்தாமல் மிதிபலகையில் நிற்பதுடன் அதில் பயணிகளையும் நிற்கச் செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அங்குள்ள ஆபத்தான சூழ்நிலையை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் அவ்வாறு பயணிக்கும் நடத்துனர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட, இனிமேல் பஸ் சாரதிகள் சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் சாரதிகளின் உதவியாளருக்கு வழங்கப்படும் நடத்துனர் அனுமதிப்பத்திரத்தை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றார்.
