கொவிட்-19 தொற்றுக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், சீனாவில் மற்றொரு வைரஸ் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது மனித மெட்டாப் நியூமோவைரஸ் (HMPV) என்று கூறப்படுகிறது.

சீனாவில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவின் தற்போதைய நிலைமை குறித்து சமூக ஊடகங்கள் மூலம் யோசனையை பெற்றுக்கொள்ள முடியும் என வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில அதிகாரபூர்வமற்ற அறிக்கைகள் தகனக் கூடங்களும் நிரம்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

சீனாவில் உள்ள சில சமூக ஊடக பயனர்களின் கூற்றுப்படி, இன்ஃப்ளூயன்ஸா ஏ, எச்எம்பிவி, மைக்கோபிளாஸ்மா நிமோனியா மற்றும் கொவிட்-19 உள்ளிட்ட பல வைரஸ்கள் நாட்டில் பரவி வருவதாகக் கூறப்படுகிறது.

தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு சீனாவில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் இது தொடர்பில் இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

சீனாவில் பரவி வருவதாகக் கூறப்படும் HMPV, காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது, ஆனால் கொவிட்-19 போன்ற அறிகுறிகளைக் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

சீனாவில் வைரஸ் பரவி வருவதால் சுகாதார அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

ஈராக்கை புறக்கணித்த அரசாங்கம்?
Popular This Week
|